ஆட்டோகிராஃப்-2ல் நவ்யா!

செவ்வாய், 1 ஜூலை 2008 (19:03 IST)
பொக்கிஷம் படத்தைத் தொடர்ந்து ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சேரன்.

ஆட்டோகிராஃபில் நடித்த கோபிகா, கனிகா மணப்பெண்களாகிவிட்டனர். இதில் கோபிகா, திருமணத்திற்குப் பிறகு நடிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். திருமணமானாலும் சேரன் அழைத்தால் நடிப்பேன் என்றிருக்கிறார் கனிகா.

இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நவ்யா நாயரும் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடிக்காத நிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்பது சக நடிகர்களுக்குள்ளேயே ஆவலை தூண்டியிருக்கிறது.

முதல் பாகத்தில் வந்த மல்லிகா, சினேகா இருவரும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார்களாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்