வாரிசை களமிறக்கும் ராஜேஷ்வர்!

திங்கள், 30 ஜூன் 2008 (15:23 IST)
கடலோர கவிதைகள் போன்ற அற்புதமான படங்களுக்கு கதை எழுதியவர் கே. ராஜேஷ்வர். கதையை நம்பாமல் சதையை நம்புகிறதோ என சந்தேகப்படும் அளவுக்கு கவர்ச்சியாக எடுத்து வருகிறார் இந்திரவிழா படத்தை.

வாரிசுகளை களமிறக்கும் இயக்குனர்கள் பட்டியலில் விரைவில் ராஜேஷ்வரும் இணைய உள்ளார்.

இந்திர விழா முடிந்த பிறகு தான் இயக்கும் படத்தில் வசந்தை நாயகனாக்குகிறார். இந்த வசந்த் ராஜேஷ்வரின் மகன்.

அதற்கு முன்பாக ராஜ்குமார் சந்தோஷி ரன்பீர் கபூர், கத்ரினா கஃப் ஆகியோரை வைத்து இயக்கும் புதிய படத்துக்கு கதை எழுதுகிறார் ராஜேஷ்வர்.

வெப்துனியாவைப் படிக்கவும்