சின்ன அசின் என்று விஜய் பாராட்டியதில் பாராசூட் இல்லாமலே பறந்து கொண்டிருக்கிறார் பூர்ணா, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டின் நாயகி!
பூர்ணாவின் இன்னொரு சந்தோஷம் வித்தியாசமானது. எல்லா நடிகைகளும் தான் நடித்த படம் ரிலீஸாக தாமதமானால் வருத்தப்படுவார்கள். பூர்ணாவோ சந்தோஷப்படுகிறார்.
பூர்ணா முதலில் ஒப்பந்தமான படம், ராஜ்கிரணின் பகடை. சில நாள் ஷூட்டிங்கோடு பகடை பாக்சுக்குள் சுருண்டு கொண்டது. அடுத்து கொடைக்கானல் படத்தில் ஒப்பந்தமானார் பூர்ணா. இந்த இரு படங்களுக்குப் பிறகு ஒப்பந்தமான படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு.
முதலிரண்டு படங்களும் தாமதமானதால் முனியாண்டி முதலில் திரைக்கு வருகிறது. இதுதான் பூர்ணாவின் சந்தோஷத்துக்கு காரணம்.
பகடையும் கொடைக்கானலும் சின்ன படங்கள். எப்படி நடித்தாலும் இரண்டு வரி விமர்சனம் கூட பெயராது. மாறாக முனியாண்டியில் நடித்ததால் இளைய தளபதி வாயாலே சின்ன அசின் பாராட்டு கிடைத்திருக்கிறது.