நமிதாவின் ஓபனிங் பாடல்!

திங்கள், 30 ஜூன் 2008 (15:19 IST)
நமிதா திருஷ்டி பூசணிக்காய் மாதிரி. அவர் இல்லாமல் யாரும் படமே எடுப்பதில்லை. துணிக் கடைகளின் ஓபனிங் ஃபங்ஷனில் கலந்து கொண்டிருந்தவருக்கு ஓபனிங் சாங் வைக்குமளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பளிச்சென்று சொல்வதென்றால் பணவீக்கமாக நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டிருக்கிறது நமிதா பவர்.

சுந்தர் சி. போன்றவர்களின் படங்களுக்கு கமர்ஷியல் தூணே நமிதா போன்ற கவர்ச்சிகளும், விவேக் போன்ற காமெடியன்களும்தான். தீ படத்தில் சுந்தர் சி-க்கு உதவி செய்யும் கேரக்டர் நமிதாவுக்கு. ஓபனிங் சாங் வைத்து நமி கேரக்டரை ஹீரோ ரேஞ்சுக்கு எடுத்திருக்கிறார்கள்.

இதற்காக பராசக்தியில் வரும் 'கா... கா... கா... ஆகாரம் உண்ண...' எனத் தொடங்கும் பாடலை ரீ-மிக்ஸ் செய்திருப்பதுதான் கொடுமை. ஸ்ரீகாந்த் தேவா ரீ-மிக்ஸ் செய்ய தேவா பாடியிருக்கிறார்.

தேவா குரலில் நமிதா ஆட்டம்... செம காம்பினேஷன்!

வெப்துனியாவைப் படிக்கவும்