பாம்பு கடித்து நடிகர் மயக்கம்!

ஞாயிறு, 29 ஜூன் 2008 (18:51 IST)
சண்டைக் காட்சியில் பாம்பு கடித்ததால் கிர்ர்ர்ராகி தரையில் சாய்ந்தார் நடிகர் விக்னேஷ்வரன்.

நேற்று வரை விக்னேஷ் என்று அறியப்பட்டவர் விக்னேஷ்வரன் என பெயரை மாற்றி 'ஈசா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜபாளையம் ஏரிக்கரை கருவேலங்காட்டில் இதன் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

விக்னேஷ்வரனுடன் மோதும் வில்லன்கள், அவரை சமாளிக்க முடியாமல் அவர் மீது பாம்பை விட்டெறிந்து தப்பி ஓடுவதாக காட்சி.

வில்லன்கள் விட்டெறியும் பாம்பை, கம்பால் விக்னேஷ்வரன் தடுக்க வேண்டும். ஆனால் டேக்கின்போது, விக்னேஷ்வரனின் கையில் விழுந்த பாம்புகள் அவரை கடிக்க, சற்று நேரத்தில் தலை கிறுகிறுக்க மயக்க நிலைக்கு தள்ளப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விக்னேஷ்வரனின் கையை கடித்த பாம்புகள் விஷப்பல் பிடுங்கப்பட்டவை என்பதால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என தெரிவித்தார், படத்தின் இயக்குனர் பாலகணேஷ்!

வெப்துனியாவைப் படிக்கவும்