அம்மனாகிறார் சிம்ரன்!

ஞாயிறு, 29 ஜூன் 2008 (18:49 IST)
அம்மாவான சிம்ரன் வரும் 30 ஆம் தேதி அம்மனாகிறார். இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியை ஆன் செய்தால் உங்கள் வரவேற்பரைக்கே வந்து சிம்ரன் அம்மன் அருள்பாலிப்பார்.

ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிம்ரன் திரையின் 5வது குறுந்தொடர் 30 ஆம் தேதி தொடங்குகிறதுஐ. ஆதிபரா சக்தி அம்மனின் திருவிளையாடலை மையமாகக் கொண்ட தொடர் இது.

மானுடன் ஒருவன் தெய்வ ரகசியம் அறிந்து தானே கடவுளாக முயற்சிப்பதும், ஆதிபராசக்தி தனது பக்தையின் உடம்பில் புகுந்து அந்த தீய மானுடனை அழிப்பதும் கதை.

இதில் அம்மனாக நடிக்கிறார் சிம்ரன். இந்த தொடரில் சிம்ரனுக்கு மொத்தம் 14 கெட்டப்புகள். தொடருக்கு நவவெள்ளி என்று பெயர் வைத்துள்ளனர்.

தொடரை பார்ப்பவர்களுக்கு அம்மன் அருன் கிடைக்கிறதோ இல்லையோ, சிம்ரன் கடாட்சம் நிச்சயம்!

வெப்துனியாவைப் படிக்கவும்