கரண் படத்தின் பெயர் குழப்பம்!

ஞாயிறு, 29 ஜூன் 2008 (18:48 IST)
மலையன் படத்தைத் தொடர்ந்து கரண் நடிக்கும் படம் கனகவேல் காக்க. சரணின் உதவியாளர் படத்தை இயக்குகிறார்.

சரணின் உதவியாளர் திருவாரூர் பாபு இயக்கும் கந்தா படத்திலும் கரண்தான் ஹீரோ. இதனால் கனகவேல் காக்க படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோது திருவாரூர் பாபு தனது படத்தின் பெயரை கனகவேல் காக்க என மாற்றி வைத்ததாக பலரும் தவறாக நினைத்தனர். ஆனால் உண்மை வேறு.

கனகவேல் காக்க படத்தை இயக்கும் சரணின் உதவியாளர் பெயர் பாலமுருகன். அப்படியானால் கந்தா?

கனகவேல் காக்க முடிந்த பிறகு கந்தாவில் நடிக்கிறார் கரண். இதனை இயக்கும் திருவாரூர் பாபு தனது பெயரை பாபு கே. விஸ்வநாத் என மாற்றியுள்ளார். பாபு சொந்தப் பெயர். விஸ்வநாத் அவரின் தந்தை பெயர்.

ஊர் பெயருடன் இருந்தவர் சினிமாவுக்காக தந்தை பெயருக்கு தாவயுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்