எம்.ஜி.ஆர். வழியில் ரஜினி!

வெள்ளி, 27 ஜூன் 2008 (19:40 IST)
குசேலனில் பல்வேறு ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம்களில் தோன்றுகிறார் ரஜினி. அடிமைப்பெண், நாடோடி மன்னன் படங்களில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆருக்கு என்னவிதமான உடைகள், சிகை அலங்காரங்கள் பொருந்தும் என வரைந்து பார்ப்பார்கள். பிறகு அதில் சிறந்தது தேர்வு செய்யப்படும்.

எம்.ஜி.ஆர். படங்களில் பின்பற்றும் இந்த முறையை, தனது தந்தை பீதாம்பரம் மேக்கப் மேனாக இருந்தபோது அருகிலிருந்து கவனித்துள்ளார் பி. வாசு. அந்த அனுபவத்தில் குசேலனிலும் அதே முறை கையாண்டதாக பி. வாசு கூறினார்.

குசேலனுக்காக 16 ஸ்பெஷல் விக்குகள் தருவிக்கப்பட்டன. அதேபோல் உடைகள். இதனை ரஜினி அணிந்து பார்த்து, சிறந்ததை அவரே தேர்ந்தெடுத்துள்ளார்.

ரஜினியை இளமையாக காண்பிக்க ஸ்பெஷல் மேக்கப் போடப்பட்டது. அது என்ன என்பதை படம் வெளிவரும் வரை வெளியிடப் போவதில்லை என்றார் பி. வாசு.

வெப்துனியாவைப் படிக்கவும்