உஷா‌ர் கருணாஸ்!

வெள்ளி, 27 ஜூன் 2008 (19:40 IST)
திண்டுக்கல் சாரதியில் நாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இது மலையாள வடக்கு நோக்கு எந்திரம் படத்தின் ரீ-மேக். திசை அறியும் கருவியின் முள் எங்கே எப்படி வைத்தாலும் வடக்கு நோக்கியே இருக்கும். அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும், சூழலிலும் மனைவியை சந்தேகத்தோடு பார்ப்பவனின் கதையிது.

கதயாநாயகனாக நடித்து ஆனானப்பட்ட வடிவேலுவே விழுப்புண் வாங்கியதால் தனது விஷயத்தில் உஷாராக இருக்கிறார் கருணாஸ். திண்டுக்கல் சாரதி குறித்து நிருபர்கள் கேட்டாலும், மறக்காமல் தான் காமெடி செய்யும் திருவண்ணாமலை, அயன் படங்கள் குறித்தும் கூறுகிறார்.

இனி நாயகனாக மட்டுமே கருணாஸ் நடிப்பார் என தவறாக நினைத்து காமெடி ரோலுக்கு ஒப்பந்தம் செய்யத் தயாரிப்பாளர்கள் தயங்கினால் என்ன செய்வது. அதற்காகத்தான் இந்த உஷார் விவரிப்பு.

சினிமாவில் காமெடி செய்தாலும் விஷயத்தில் சிரியஸாகத்தான் இருக்கிறார் கருணாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்