விநியோகதஸ்தரானார் திருமுருகன்!

வியாழன், 26 ஜூன் 2008 (19:51 IST)
எம்மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படங்களின் இயக்குனர் திருமுருகன் விநியோகஸ்தராகவும் மாறியிருக்கிறார்.

பரத் நடித்திருக்கும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்துள்ளது. தென் மாவட்ட கதையான இதில் வடிவேலுவின் காமெடி அனைவராலும் ரசிக்கப்படும் என்கிறார்கள்.

மற்ற அனைவரையும் விட இயக்குனர் திருமுருகனுக்கு தனது படத்தின் மீது அதீத நம்பிக்கை. அதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்.

தனது படம் என்பதால் மட்டுமே விநியோக துறையில் கால் வைத்ததாகக் கூறினார் திருமுருகன்.

வெப்துனியாவைப் படிக்கவும்