காட்டுப்பயல் - தயாராகும் தருண்கோபி!

புதன், 25 ஜூன் 2008 (20:04 IST)
தனது புதிய படம் காட்டுப்பயலே-க்கு தயாராகி வருகிறார் இயக்குனர் தருண்கோபி. நேற்று வரை இயக்குனர், ஸ்கிரிப்டுக்கு மூளையை மட்டும் பலமாக வைத்திருந்தால் போதும். ஆனால் கதாநாயகனாக நடிக்க அதுமட்டும் போதாதே!

நடிப்பது என்று தீர்மானித்ததும் ஜிம்முக்கு சென்று உடம்பை குறைத்தார் எஸ்.ஜே. சூர்யா. அமீர் ஜிம்முக்கு சென்றதோடு பத்திய சாப்பாட்டில் பாதியாக இளைத்தார்.

இவர்கள் வழியில் இப்போது தருண்கோபி. உடற்பயிற்சி செய்வதோடு, கனல் கண்ணன் மாஸ்டரிடம் முறையாக சண்டைப் பயிற்சி எடுத்து வருகிறார்.

தருண்கோபியின் ஏரியா ஆச்சன். அதனால்தான் இந்த சண்டைப் பயிற்சி. காட்டுப்பயலேயை இவரது மதுரா டாக்கீஸ் தயாரிக்கிறதுஐ. எல்லாம் தயாரான பிறகும் கோபிக்கேற்ற கோபிகை கிடைக்கவில்லை. அதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்