ராம. நாராயணனை எதிர்த்து பஞ்சு அருணாச்சலம்!

புதன், 25 ஜூன் 2008 (20:01 IST)
ஜூலை 6 தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல். ராம. நாராயணனின் முன்னேற்ற அணிக்கு எதிராக, கேயாரின் தலைமையிலான முற்போக்கு அணி அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

நீதிமன்றம் சென்று தேர்தல் அதிகாரி முருகனை மாற்றியதோடு, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம் என்ற புதிய விதிக்கு தடை வாங்கியவர்கள் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்ட முடிவில் முற்போக்கு அணியின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ராம. நாராயணனை எதிர்த்து தலைவர் பதவிக்கு பஞ்சு அருணாச்சலம் முற்போக்கு அணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் ராதிகா, கோயார். நிர்வாகக் குழுவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், ஏ.எம். ரத்னம், கமீலா நாசர், ராதா கிருஷ்ணன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பஞ்சு அருணாச்சலம் திறமையான தயாரிப்பாளர். நிர்வாகத்தில் அனுபவசாலி. அதனால் அவரை தலைவர் பதவி வேட்பாளராக தேர்ந்தெடுத்தோம் என முற்போக்கு அணித் தலைவர் கேயார் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்