பாயத் தயாராகும் எஸ்.ஜே. சூர்யா!

செவ்வாய், 24 ஜூன் 2008 (19:40 IST)
நீண்ட தலைமுடி, ஒரு கை, கால் செயலிழந்த தோற்றம் என எஸ்.ஜே. சூ‌ர்யா தனது இமேஜிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு தொடங்கிய படம் 'வில்'. சில காட்சிகள் எடுத்த நிலையில் படம் ஃபைனான்ஸ் பிரச்சனையால் தடைபட்டது. ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலை.

இந்நிலையில் 'வில்லு' என்ற பெயருடன் விஜயின் புதிய படம் அறிவிக்கப்பட்டது. வில் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் வில்லு என்று அதே சாயலில் பெயர் வைத்ததை எஸ்.ஜே. சூர்யா விரும்பவில்லை. இதை தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதுகிறார்.

இதனால், கைவிடப்பட்ட 'வில்' படத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். வில்-லுக்கு தயாரிப்பாளர் தேடிவரும் அவர், முடிந்தால் விஜய் படத்திற்கு முன்பே வில்லை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

விஜய்க்கு நிச்சயம் இது குஷியான செய்தியாக இருக்கப் போவதில்லை!

வெப்துனியாவைப் படிக்கவும்