வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியின் திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். சென்னையின் ஒருபுறம் இந்த மங்கள நிகழ்ச்சி நடக்க, இன்னொருபுறம், சென்னை ட்ரெஸ்ட் புரம் பொன்மணி திருமண மண்டபம் அமளி துமளிபட்டது.
வைரமுத்துக்கு சொந்தமான பொன்மணி திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மண்டபத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தைச் சுற்றி போலீஸ் படை குவிக்கப்பட்டது.
மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருக்கும் போதே, போலீசார் வெடிகுண்டு சோதனையை நடத்தியதால் அந்த ஏரியாவே பீதியானது.
வியர்க்க விறுவிறுக்க பல மணி நேரம் தேடியும் வெடிகுண்டுக்கு பதில் சிவாசி வெடிகூட சிக்கவில்லை. அதன்பிறகே, வெடிகுண்டு மிரட்டல் வெற்று மிரட்டல் என தெரியவந்தது.