பிரசன்னா, சினேகா நடிக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. பென்சில்வேனியாவில் பிரசன்னா ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களுடன் மோதும் காட்சியை எடுத்தார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.
இந்த படப்பிடிப்பின் போது ஹாலிவுட் நடிகர் ஜான்ஷா அடித்தது, தவறுதலாக பிரசன்னாவின் தலை மீதே விழுந்தது. ஜான்ஷா ஆஜாகுபாகுவான நடிகர். பிரசன்னாவோ தமிழ் நாட்டு தயிர் சாதம்.
அடிவாங்கியதும் மயங்கி விழுந்தார் பிரசன்னா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேர சிகிச்சைக்குப் பிறகே பிரசன்னாவின் மயக்கம் தெளிந்தது.
நல்லவேளையாக கவலைப்படும்படி எதுவுமில்லை, தொடர்ந்து பிரசன்னா படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றார் அருண் வைத்தியநாதன்.