பந்தயம் மீது வழக்கு!

திங்கள், 23 ஜூன் 2008 (19:26 IST)
நிதின் சத்யாவை ஹீரோவாக வைத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கும் படம் பந்தயம். இதன் கதை என்னுடையது என வழக்கு தொடர்ந்துள்ளார் சுரேஷ் எனும் உதவி இயக்குனர்.

சுரேஷ் எஸ்.ஏ.சி.யிடம் உதவி இயக்குனராக இருந்தபோது முரட்டுப்பயல் என்ற கதையை கூறியிருக்கிறார். எஸ்.ஏ.சி. கதை நன்றாக இருக்கிறது என்று கூறினாலும், படப்பிடிப்பை தொடங்காமல் காலம் கடத்தியிருக்கிறார்.

இதனால் பி. வாசுவிடம் அதே கதையைக் கூறி, அவரது மகன் ஷக்தியை வைத்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் முரட்டுப்பயல் என்ற படத்தை எடுத்து வருகிறார் சுரேஷ்.

இந்நிலையில் வெளியானது எஸ்.ஏ.சி.யின் பந்தயம் பட அறிவிப்பு. தான் முரட்டுப்யல் என்ற பெயரில் எழுதி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் எடுத்துவரும் அதே கதைதான் பந்தயம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் சுரேஷ்.

முரட்டுப்பயல் கதையை சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதால் உண்மை கண்டிப்பாக வெளிவரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் சுரேஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்