மரியாதைக்கு மாறிய சிம்பு!

சனி, 21 ஜூன் 2008 (20:45 IST)
சிம்பு என்றால் தள்ளிப் போகிற வம்பும் நெருங்கி வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படிதான் போடா போடி பெயரும்.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் ஷெனாயா ஃபிலிம்சுடன் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு போடா போடி என்று பெயர் வைத்தது படத்தை இயக்க இருக்கும் விக்னேஷ் சிவாதானாம்.

ஆனால், சிம்பு படம் என்பதால் பெயர் வைத்த பெருமையை சிம்புவுக்கே கொடுத்து, இந்தப் பெயர் தனுஷின் திருடா திருடிக்கு போட்டியாக வைத்தது என கொளுத்திப் போட்டனர் பொழுதுபோகாத சில அன்பர்கள்.

இது என்னடா வம்பு என்று போடா போடிக்கு முன்பு திருவை சேர்த்து திரு. போடா திரு. போடி என்று மாற்றி வைத்துள்ளனர்.

இதற்குப் பிறகும் வம்பு ஓயவில்லை. திருடா திருடியில் உள்ள திருவையும் இணைச்சுட்டாங்கப்பா என உரக்கவே சீண்டுகிறார்கள் சிலர்.

பாவம், சிம்பு!

வெப்துனியாவைப் படிக்கவும்