திருமணத்திற்குப் பின்... - மகேஸ்வரி!

சனி, 21 ஜூன் 2008 (20:42 IST)
கருத்தம்மா மகேஸ்வரியின் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம். மறுநாளே சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

நீண்ட காலமாக காதலித்த ஜெய்கிருஷ்ணாவை கைபிடிக்கும் சந்தோஷத்தில் இருந்தவர், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நடக்கும் கல்யாணம் என்ற வதந்தியை மறுத்தார். இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் இது என்றவர், தனது ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றையும் கூறினார்.

பிற நடிகைகளைப் போல திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதில்லையாம் மகேஸ்வரி. சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் எதில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பாராம்.

நல்ல முடிவு. தயாரிப்பாளர்கள் வரவேற்று வாய்ப்பு கொடுக்க வேண்டிய முடிவு.

வெப்துனியாவைப் படிக்கவும்