எஸ்.ஜே. சூர்யாவுக்கு அ ஆ படத்தில் ஓபனிங் சாங் எழுதியவர் வாலி. ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் என்ற அந்தப் பாடல் சூப்பர் ஹிட். இசையமைத்து பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான்.
அதேபோல் ஒரு பாடலை சிம்புவுக்காக சிலம்பாட்டம் படத்தில் எழுதியுள்ளார் வாலி.
தமிழ் என்றொரு தமிழண்டா எனக்கு பலம் என் ரசிகண்டா கெட்டவன்னு பெயரெடுத்த நல்லவண்டா
என்ற அந்தப் பாடலுக்கு ஆர்ப்பாட்டமாக இசை கோர்த்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இந்தப் பாடலை சங்கர் மகாதேவன் பாட, ஒலிப்பதிவு செய்தார் யுவன்.
சிலம்பாட்ட ஹைலைட்களில் வாலியின் வார்த்தை ஜாலத்தில் அமைந்த இந்தப் பாடலும் ஒன்று.