முகத்தில் வெட்டரிவாள் மீசை. கையில் திருப்பாச்சி வீச்சரிவாள். சினிமாவில் புஜபலம் மட்டுமே காட்டிவந்த நெப்போலியனை மாற்றி காட்டப் போகும் படம், பள்ளிகொண்டபுரம்.
புழுதியே படுக்கையாகிப் போன ஏழைகளுக்காகப் போராடும் மண்ணின் மைந்தன் வேடம் இதில் நெப்போலியனுக்கு. கொஞ்சம் வயதான தோற்றத்தில் வருவதால் கொஞ்சும் இளமைக்கு புதுமுகம் அமல்நாத், மீனாட்சி ஜோடி. நெப்போலியனுக்கு ஜோடி ஈஸ்வரிராவ்.
மாசம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பு அனில் எம்.ஆர். இயக்கம் அத்வைதன். தெலுங்கு நடிகர் சுதிர் வில்லன். இவர்களுடன் தெரிந்த முகங்களாக, காதல் தண்டபாணி மற்றும் கருணாஸ்.