பழ‌னி‌யி‌‌ல் ‌வி‌ல்லு!

திங்கள், 16 ஜூன் 2008 (18:10 IST)
ச‌ரியாக‌த்தா‌ன் பெய‌ர் வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். ‌வி‌ல்‌லி‌லிரு‌ந்து புற‌ப்ப‌ட்ட அ‌ம்பாக அ‌த்தனை வேக‌ம் ‌வி‌ல்லு பட‌ப்‌பிடி‌ப்பு. ‌விஜ‌ய், நய‌ன்தாரா இட‌ம்பெறு‌ம் கா‌ட்‌சி‌க‌ள்தா‌ன் முத‌லி‌ல். பொ‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல் அதனை படமா‌க்‌கிய ‌பி‌ன் பழ‌னி‌யி‌ல் லே‌ண்‌ட் ஆ‌‌கி‌யிரு‌க்‌கிறது ‌வி‌ல்லு டீ‌ம்.

இ‌ங்கு‌ம் ‌விஜ‌ய், நய‌ன்தாரா இட‌ம் பெறு‌ம் கா‌ட்‌சிகளை ப‌த்து நா‌‌‌‌ட்க‌ள் படமா‌க்கு‌கிறா‌ர் ‌பிரபுதேவா. தே‌வி ஸ்ரீ ‌பிரசா‌த் ஏ‌ற்கனவே டியூ‌ன்களை கொடு‌த்து ‌வி‌ட்டதா‌ல், உ‌ள்ளூ‌ர் கா‌ட்‌சிக‌ள் முடி‌ந்தது‌ம், பாட‌ல் கா‌ட்‌சி‌க்காக வெ‌ளியூ‌ர் பற‌க்க வே‌ண்டியதுதா‌ன்.

இ‌ந்‌தி சோ‌ல்ஜ‌ர் பட‌த்‌தி‌ன் ‌ரீ-மே‌க் ‌வி‌ல்லு எ‌ன்‌கிறா‌ர்க‌ள். இது ப‌ற்‌றி ‌பிரபுதேவாவு‌ம், ‌‌விஜ‌ய்யு‌ம் இதுவரை வா‌ய் ‌திற‌க்க‌வி‌ல்லை. பட‌‌த்‌தி‌ன் வெ‌ள்‌ளி‌விழா‌வி‌ல் வெ‌‌ளி‌ப்படு‌த்தலா‌ம் எ‌ன ‌நினை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்களே எ‌ன்னவோ!

வெப்துனியாவைப் படிக்கவும்