பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசிய பிறகு நடிகைகளின் குரல் மீது கவனம் குவிந்துள்ளது.
இரவல் குரலில் இதுவரை நடித்து வந்த சினேகா முதன் முறையாக சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். இன்னொருவர் பாவான. இவரது தடித்த குரலை ஜெயம் கொண்டானில் ரசிகர்கள் காது கிழிய ஸாரி, குளிர கேட்கலாம்.
இதே படத்தின் இன்னொரு நாயகி லேகா. முன்னாள் வீஜேயான தமிழ் தந்தி பாஷை. ஆங்கிலத்துக்கு நடுவே அவரறியாமல் தமிழ் விழுந்தால்தான் உண்டு. அதனால் ரசிகர்களின் நலன் கருதி லேகாவுக்கு மட்டும் பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார். நாயகன் வினய்க்கும் டப்பிங் குரல்தான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.