விக்ரமின் இரட்டை வேடம்!

வெள்ளி, 13 ஜூன் 2008 (17:05 IST)
விக்ரம் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை மோகன் நடராஜனின் ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ் தயாரிக்கிறது.

தசாவதாரத்தைத் தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இதனையடுத்து அவர் இயக்குவது விக்ரமை.

இதில் அண்ணன், தம்பியாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார் விக்ரம். அவர் இரட்டை வேடத்தில் நடிப்பது இதுவே முதன் முறை.

அவரது ஜோடியாக நடிக்க நயன்தாரா, இலியானா, சினேகா பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்