கதை தயார் செய்து, பணம் தயார் செய்து அரை வருடமாக காத்திருந்தார் லிங்குசாமி. அதனை அரை நொடியில் காலி செய்திருக்கிறார் கார்த்தி.
ஆயிரத்தில் ஒருவன் முடிந்த பிறகு லிங்குசாமி இயக்க, அவரது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் கார்த்தி நடிப்பதாக பேச்சு. உதவியாளர்களை அழைத்து கதை விவாதம் செய்து பக்காவாக ஸ்கிரிப்ட் தயார் செய்து கார்த்தியின் வரவுக்காக காத்திருந்தார் லிங்குசாமி.
ஆனால், கார்த்தி லிங்குசாமியின் புராஜெக்டை கைகழுவிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாங்கிய அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்துவிட்டதாக கேள்வி.
இந்த திடீர் மனமாற்றத்திற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. பீமா சோனியானதுதான் கார்த்தியின் மனமாற்றத்திற்கு காரணம் என குத்து மதிப்பாக சொல்கிறார்கள். உண்மை என்னவென்று கார்த்திதான் பதில் சொல்ல வேண்டும்.