பத்திரிக்கையாளர்களை அசத்திய கிருஷ்ணா!

வெள்ளி, 13 ஜூன் 2008 (16:32 IST)
தேங்காய் மூடி ஹேர் ஸ்டைல், தேவதாஸ் தாடி என்று பார்வைக்கு ஆள் கரடு முரடு என்றாலும் படத்தில் பார்த்தால் தித்திக்கும் கற்கண்டு. சண்டையில் பறந்து பறந்து அடிப்பவர், காதலில் பாகாக உருகுகிறார்.

அலிபாபாவில் நடிக்கும் புதுமுகம் கிருஷ்ணாவைப் பற்றிதான் சொல்கிறோம். சமீபத்தில் அலிபாபாவின் இசை வெளியீட்டு விழா எளிமையாக நடந்தது. அதில் திரையிட்டு காட்டிய சில காட்சிகளிலேயே பத்திரிக்கையாளர்கைளின் நெஞ்சை கொள்ளையடித்துவிட்டார் கிருஷ்ணா.

அவரது அப்பா பட்டியல் சேகர்தான் தயாரிப்பு. ஜனனி என்ற புதுமுகம் ஹீரோயின். இயக்கம் நீலன் கே. சேகர். வித்யாசாகரின் இசையில் பா. விஜய், யுகபாரதி, ஜெயந்தா பாடல்கள் எழுதியுள்ளனர்.

பிரகாஷ்ராஜ், திலகன், பிஜுமேனன் என்ற நடிப்பு திமிங்கலங்களுக்கு நடுவில் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார் கிருஷ்ணா என்பதுதான் பெரிய கேள்வி.

வெப்துனியாவைப் படிக்கவும்