தில், தூள், கில்லி என்று ஹாட்ரிக் வெற்றி. இந்த மூன்றின் வெற்றியையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது குருவி.
தன்னை நிரூபிக்க தரணிக்கு ஒரு முன்னணி ஹீரோ தேவை. ஆத்ம நண்பர் விக்ரமோ அப்புறம் பார்ப்போம் டார்லிங் என கதவடைத்துவிட்டார். நண்பனே நட்டாற்றில் விட்ட பிறகு கைதூக்கி விட யார் இருக்கிறார்?
கடைசியாக கிடைத்த தகவலின்படி பேரரசுவின் ·பேவரிட் ஹீரோ பரத்திடம் தஞ்சமடைந்துள்ளாராம் தரணி. அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் பரத், கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து தரணிக்கு தாராளம் காட்டியிருக்கிறாராம்.