நெப்போலிய‌னின் கல்வி நிறுவனம்!

செவ்வாய், 10 ஜூன் 2008 (20:08 IST)
முறுக்கிய மீசை, முதுகுபுறம் செருகிய அரிவாள். நெப்போலியன் என்றதும் நினைவுவரும் பிம்பம் இது. நெருங்கிப் பார்த்தால் நெப்ஸ் பில்கேட்ஸின் பிரதர்.

இவரது ஜீவன் மென்பொருள் நிறுவனம் கொடிகட்டி பறக்கிறது. அந்த கொடியில் மேலுமொரு சிறப்பு சேர்த்திருக்கிறார் நெப்போலியன்.

ஜீவன் தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்! நெப்போலியன் புதிதாக தொடங்கி இருக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர் இது. இதன் நோக்கம் - எளிமையாக சொல்வதென்றால் கல்வி நிறுவனங்களுக்கும், குழும நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவது.

கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவரும் மாணவர்கள் ரா மெட்டீரியல் போன்றவர்கள். அப்படியே ஒரு நிறுவனத்தில் பணிக்கமர்த்த முடியாது. வணிகத்துக்குரிய பேச்சு, உடை, நடைமுறை என அவர்கள் கற்றுக்கொள்ள எக்கச் சக்கம் இருக்கிறது. இவையணைத்தையும் நெப்போலியனின் நிறுவனம் கற்றுத் தரும்.

இதுதவிர படிப்பவர்களின் பாஸ்போர்ட், விசா முதலியவற்றிலும் உதவிகள் செய்யும்.

திறமையானவர்களை உருவாக்கும் நெப்போலியன் திரையுலகின் வித்தியாசமான நபர்தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்