லண்டன் ட்ரீம்ஸில் அசின்!

சனி, 7 ஜூன் 2008 (17:10 IST)
webdunia photoFILE
அசினின் பாலிவுட் கனவு நனவாகி வருகிறது. அமீர் கான் போட்ட பிள்ளையார் சுழி சல்மான் கான், அஜய் தேவ்கான் என கான் கானாக தொடர்கிறது.

இந்தி கஜினி வெளிவரும் முன்பே அசினுக்கு பல ஃபர்கள். அதில் அசின் ஒத்துக்கொண்டது, விபுல் ஷாவின் லண்டன் ட்ரீம்ஸ்.

சல்மான் கான், அஜய் தேவ்கான் இருவரும் லண்டன் ட்ரீம்ஸில் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இதில் சல்மானின் இன்னாளைய தோழி கத்ரினா க·ப் நடிப்பதாக இருந்தது.

என்ன நடந்ததோ... கத்ரினாவை ஓவர்டேக் செய்து, வாய்ப்பை கைப்பற்றியிருக்கிறார் அசின்.

தாசவதாரமே அசினின் கடைசி தென்னிந்திய மொழித் திரைப்படமாக இருந்தாலும், ஆச்சரியமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்