என்னுடைய ப்ளேபாய் இமேஜை மாற்றப் போகும் படம் என்றால் எஸ்.ஜே. சூர்யா. சொன்னது போலவே இருந்தது படத்துக்கான அவரது தோற்றமும். நீண்ட தலைமுடி, கண்ணாடி, கைகால் சுவாதீனமில்லாத இளைஞன்.
எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட 'வில்' படம், நாணேற்றுவதற்குள் முறிந்துவிட்டது. இதுபற்றி கூறிய எஸ்.ஜே. சூர்யா, 'வில்' பட தயாரிப்பாளருக்கு இப்போதைக்கு அந்தப் படத்தை தயாரிக்க விருப்பமில்லை. அதனால் படம் கைவிடப்பட்டது என்றார்.
எஸ்.ஜே. சூர்யா கூலாக கூறிவிட்டார். வில்லில் அவரது ஜோடியாக நடிக்கயிருந்த ஷெரின் நிலைமைதான் கஷ்டம். தமிழில் பூவா தலையா, வில் என்ற இரண்டே படங்கள்தான் அவர் கைவசமிருந்தன. அதில் ஒன்று ஃபணால். இதனால் அச்சு முறிந்த அவஸ்தையில் இருக்கிறார்.