ஆனந்த அவஸ்தை என்போமே, அதனை ஆசை தீர அனுபவத்திருக்கிறார் சினேகா.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக நியூஜெர்சி சென்றவர், ஓய்வு நேரத்தில் அங்குள்ள திரையரங்கில் பாண்டுரங்காடு படத்தை பார்க்கச் சென்றிருக்கிறார். பாண்டுரங்காடு சினேகா நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய தெலுங்குப் படம்.
திரையுலக இருட்டில் ரசிகர்களோடு ரசிகராக இருந்த சினேகாவை சிலர் அடையாளம் கண்டுகொள்ள, ஒரே ஆர்ப்பாட்டம்தானாம். படம் பார்க்க வந்தவர்கள் சினேகாவை சூழ்ந்துகொண்டு அவரை திக்குமுக்காட வைத்துள்ளனர். ஆட்டோகிராஃப் வைபவங்களுக்குப் பிறகு தனது ட்ரேட்மார்க் எழுபது எம்.எம். சிரிப்புடன் திரையரங்கை விட்டு கிளம்பியிருக்கிறார் சினேகா.
அமெரிக்கா என்பதால் இப்படி. இதுவே அமைஞ்சிக்கரை என்றால்...? ஆனந்தம் போய் வெறும் அவஸ்தை மட்டும் மிஞ்சியிருக்கும்!