தனது கஞ்சீவரம் படத்தை இந்தியாவின் முன்னணி இயக்குனர் ஷ்யாம் பெனகலுக்கு திரையிட்டு காண்பித்தார் ப்ரியதர்ஷன். கஞ்சீவரம்? இப்போதைய காஞ்சிபுரத்தின் புரதான பெயரே கஞ்சீவரம்! அங்குள்ள நெசவாளர்களின் நொய்மையான வாழ்வைச் சொல்லும் படமே கஞ்சீவரம்.
படம் பார்த்த ஷ்யாம் பெனகல் ப்ரியதர்ஷனுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். படத்தை, அதன் தரத்தை, ப்ரியனின் ஆளுமையை பாராட்டியவர், அவரது கதை சொல்லும் விதம் விக்டர் க்யூகோ, லியோ டால்ஸ்டாய் போன்ற ஒப்பற்ற எழுத்துக் கலைஞர்களை ஒத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிக்காக மட்டுமே படமெடுத்து வந்த ப்ரியதர்ஷன், விருதுக்காக எடுத்தப்படம் கஞ்சீவரம். பெனகலின் பாராட்டு ப்ரியதர்ஷனின் விருது ஆசையை நனவாக்கியிருக்கிறது என்றால் அது பொய்யில்லை.