பாரதிராஜா விடுத்த சவால்!

வியாழன், 5 ஜூன் 2008 (19:23 IST)
டப்பிங் படமொன்றில் ஆடியோ வெளியீட்டு விழா போலவே இல்லை. பாரதிராஜா, அமீர், சுப்ரமணிய சிவா, விஜய் ஆண்டனி என அரங்கம் நிறைய தமிழின் பெருந்தலைகள். எல்லாம், நமிதா நடிப்பில் வெளிவரவிருக்கும் பிரமாண்டம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக.

1977 படத்துக்காக சரத்குமாருடன் டூயட் பாட வெளியூர் சென்றிருப்பதால் விழாவுக்கு நமிதா ஆப்சென்ட். அதை நிறைவு செய்வதுபோல் நமிதாவின் ஆளுயர போஸ்டரை அரங்கத்தைச் சுற்றி வைத்திருந்தனர்.

"அரங்கம் பிரமாண்டமாக இருக்கும் என்று வந்தால், அங்கம் பிரமாண்டமாக இருக்கிறது" என பதினாறு வயதினிலே பரட்டை ஸ்டைலில் பன்ச் வைத்தார் பாரதிராஜா. தனது கருத்தம்மாவைவிட, பருத்திவீரன் ஒருபடி மேலே என்றவர், நான் அமீரை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். நானா அவனா பார்த்திடுவோம் என்றார். படைப்பாளிகளுக்கேயுரிய சவாலுடன்.

பேசிய அனைவரின் வார்த்தைகளும் சர்க்கரையாக இனித்தாலும், நமிதா இல்லாத விழா இலுப்பைப் பூவாகவே இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்