செம்டம்பரில் குசேலன்!

வியாழன், 5 ஜூன் 2008 (14:42 IST)
மீண்டும் ரஜினி, கமல் படங்கள் போட்டி! சென்ற வாரம் பலத்திரிக்கைகளில் இதுதான் தலைப்புச் செய்தி. தசாவதாரத்துடன் குசேலனும் ரிலீஸாவதைத்தான் அந்தப் பத்திரிக்கைகள் போட்டி என்று குறிப்பிட்டிருந்தன.

ஆனால், உண்மை நிலவரம் வேறு. தசாவதாரம் இம்மாதம் (13 ஆம் தேதி) வெளியாகிறது. ரஜினியின் குசேலன்?

பி. வாசு படத்தை ராக்கெட் வேகத்தில் எடுத்தாலும் இந்த மாதம் படம் வெளிவர வாய்ப்பேயில்லை. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை கொண்டுவரவே ரஜினிக்கு விருப்பம். போஸ்ட் புரொடக்சன் முடிந்து இரு மொழிகளிலும் படம் தயாராக ஜூலை இறுதியாகிவிடுமாம்.

ஆக, செம்டம்பரில் படத்தின் ரிலீஸை வைத்துக் கொள்வது என முடிவு செய்துள்ளனர். பி. வாசு தரப்பிலிருந்து கசிந்த நம்பகமான தகவல் இது. படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஆறுதலாக இசையை கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்