பசுபதிக்கு பட மழை!

திங்கள், 2 ஜூன் 2008 (20:13 IST)
நடிகர் பசுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருப்பார். அப்புறம் கொஞ்ச நாட்கள் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டில் இருப்பார்.

அதன்படி 'வெயில்' படம் வருவதற்கு முன் பல படங்கள் கைவசம் இருந்தது. எல்லாம் நடித்துக்கொடுத்து இறுதியாக 'வெளில்' படம் வெளியானதும் பங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். சில மாதங்களுக்குப் பின் தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார்.

webdunia photoWD
'கருப்புசாமி குத்தகைதாரர்' படத்தை இயக்கியவர் மூர்த்தி. இவர் அடுத்தபடியாக பசுபதியை வைத்து இயக்கும் படம்தான் 'வெடிகுண்டு முருகேசன்'. 'கூடல் நகர்', 'வைத்தீஸ்வரன்' ஆகிய படங்களை இயக்கிய அண்ணாமலை ஃபிலிம்ஸ்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அடு‌த்து பி. வாசு இயக்கும் குசேலன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குனர் மனோபாலா இயக்கும் படம் 'காதலிக்க நேரமில்லை'. பெயர் மட்டுமல்ல கதையும் பழைய படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தின் கதைதான். பழைய படத்தில் முத்துராமன் நடித்த பாத்திரத்தில் பசுபதியும், நாகேஷ் கேரக்டருக்கு வடிவேலுவும், டி.எஸ். பாலையா பாத்திரத்திற்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியும் நடிக்கவுள்ளனர்.

இதுமட்டுமின்றி, இந்தி படமான 'டாக்ஸி' என்ற ரீ-மேக் படத்திலும் ஹீரோவாகிறார் பசுபதி. வந்தால் வரும், போனால் போகும் என்ற கதைதான்.