முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளவர் பாண்டு. தன் வாய் சேஷ்டையால் குபீர் சிரிப்பை வரவழைப்பவர்.
மிகவும் சிரமப்பட்டு சினிமா துறையில் முன்னேறிக் கொண்டு வந்தாலும் தன் பழைய தொழிலான 'சீல்டு'கள் செய்து கொடுக்கும் பணியை இன்றும் செய்து வருகிறார்.
சினிமாவில் அனைத்து இயக்குனர்களையும் தனக்குத் தெரியும் என்றாலும், தன் மகனை ஹீரோவாக்கும் ஆசையை வெளியே சொல்லாமல் இருந்தார். அதுமட்டுமின்றி, சொந்தமாக மகனை வைத்து படம் தயாரிக்கவும் வசதியில்லை என்பதால் முதலில் சின்னச் சின்ன கேரக்டரில் நடித்து நடிப்பு நுணுக்கங்களை தெரிந்துகொள்ள நினைத்தார்.
அதன்படி, தற்போது 'பட்டாளம்' என்ற படத்தில் அவரின் மகன் பாண்டு ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் செந்தில் தன் மகனை வைத்து ஒரு படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டதுபோல் இல்லாமல் படிப்படியாக வளரவேண்டும் என்று நினைக்கிற பாண்டு புத்திசாலிதான் ஹாங்...