கார்ப்பரேட் கம்பெனிகளும் அலையவிடுகின்றன!

திங்கள், 2 ஜூன் 2008 (17:54 IST)
ஒரே நேரத்தில் பத்துப் படங்களை தயாரிக்கும் முடிவில் பிரமாண்ட விழாவை நடத்தியது பிரமிட் சாய்மீரா நிறுவனம். நலிந்த பத்து தயாரிப்பளர்களை தேர்வு செய்து, அந்த விழா மேடையிலேயே பத்து தயாரிப்பாளர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்தில் மூன்று தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் அறிவிக்கப்படவில்லை. மற்ற ஏழு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே இயக்குனர்கள் யார்... யாரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இரண்டு படங்கள் மட்டுமே படப்பிடிப்பில் உள்ளது.

தெய்வானை மூவிஸ் மூலம் ஜேப்பி அழகர் இயக்கும் 'வானம் பார்த்த சீமையிலே' படமும், சங்கிலிமுருகன் தயாரிப்பில் 'பொன்மனம்', 'என் புருஷன் குழந்தை மாதிரி' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் 'அழகர்மலை' படமும்தான். மற்ற படங்களைப் பற்றிய செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

இதனிடையே இன்னும் பத்துப் படங்களைத் தயாரிக்கும் முடிவிலபல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓ.கே. சொல்லி வைத்துள்ளது பிரமிட் சாய்மீரா நிறுவனம். முதல் படங்களுக்கு வழியில்லை, இரண்டாவது செட் படங்கள் நடக்குமா? என்ற கவலையில் கம்பெனிக்கு நடையாய் நடந்து வருகின்றனர் இரண்டாவது செட்டில் கதை சொன்ன இயக்குனர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்