யாவரும் நலம் - எக்ஸ்க்ளூஸிவ் தகவல்!

வெள்ளி, 30 மே 2008 (19:35 IST)
யாவரும் நலம் மாதவன் நடிக்கும் படம். ட்ராஃபிக் சிக்னல் உள்ளிட்ட இந்திப் படட்ஙகளில் நடித்த நீது சந்திரா மாதவனின் ஜோடி. படத்தில் இருவரும் கணவன் மனைவியாக வருகிறார்கள்.

அறிமுக இயக்குனர் விக்ரம் இயக்கும் இந்தப் படம் ஒரு க்ரைம் த்ரில்லராம். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகிறது.

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் கதை நடக்கிறதுரு. யாவரும் நலம் என்பது படத்தின் பெயர் மட்டுமல்ல, படத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்று இடம்பெறுகிறது. அதன் பெயர்தான் யாவரும் நலம். அந்த தொலைக்காட்சி தொடரின் பெயரையே படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த தொடரை பின்னணியாகக் கொண்டே கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறதாம். முற்றிலும் புதுமையான சொற்றொடருக்கு நியாயம் செய்வதுபோல் யாவரும் நலம் இருக்குமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்