ஜூன் 15 வாரணம் ஆயிரம் ஆடியோ!

வெள்ளி, 30 மே 2008 (19:42 IST)
webdunia photoWD
கெளதம் - ஹாரிஸ் காம்பினேஷன் எப்போதும் ஸ்பெஷல்தான். இருவரும் இணைந்தால், நாலு நல்ல பாட்டுகளாவது தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைக்கும். அதில் ஒன்று அந்த ஆண்டின் மோஸ்ட் பாப்புலர் பாடலாக இருக்கும்.

உதாரணத்திற்கு மின்னலே வசீகரா, காக்க காக்க என்னை கொஞ்சம் மாற்றி, வேட்டையாடு விளையாடு பார்த்த முதல் நாளே, பச்சைக்கிளி முத்துச்சரம் கருகரு விழிகளில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த காம்பினேஷனின் புதுவரவு வாரணம் ஆயிரம். ரசிகர்களைவிட கெளதமும், சூர்யாவும் அதிகம் எதிர்பார்க்கும் படம். ஆகஸ்ட் 15 தான் படம் திரைக்கு வருகிறது என்பதால் ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக ஜூன் பதினைந்தே பாடல்களை வெளியிடுகிறார்களாம்.

பாடல்களை கேட்டு கண் செருகி மெய் மறப்பதற்குள் ஆகஸ்ட் 15 வந்துவிடும். பாடலை வெளியிடுங்கள், கேட்க காதுகள் காத்திருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்