பாடகர் விக்ரம்!

வியாழன், 29 மே 2008 (19:50 IST)
பாத்ரூம் பாடகரான விக்ரம் அவ்வப்போது பப்ளிக்கிலும் பாடுவார். நட்சத்திர கலை விழா நடந்தால் விக்ரமின் பாடல், நிகழ்ச்சி நிரலில் தவறாமல் இடம்பெறும்.

கந்தசாமிக்காக முதல் முதலில் தனது குரலை ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்தார் விக்ரம். கந்தசாமியில் எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி என்ற பாடல் இடம்பெறுகிறது. டூயட் பாடலான அதனை சுசித்ராவுடன் இணைந்து விக்ரம் பாடியிருக்கிறார்.

கமல், விஜய், சிம்பு வரிசையில் விக்ரமும் சினிமாவில் பாடி, தனது நவரச திறமையில் ஒன்றை அதிகரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை மெக்சிமேகாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுசி. கணேசன்.

வெப்துனியாவைப் படிக்கவும்