இருபது வருடங்களுக்கு முன் பாண்டியராஜன் எடுத்த படம் 'கன்னிராசி'. பாண்டியராஜனுடன் பிரபு, ரேவதி நடித்திருந்த இந்தப் படம் அன்று பம்பர் ஹிட். அதே பெயரில் மீண்டும் ஒரு தமிழ்ப் படம்.
வேலை படத்தை இயக்கி தனது கணக்கைத் தொடங்கியவர் சுரேஷ். கடைசியாக இயக்கிய என்னவளே, சீனியர் ஜூனியர் ஃபிளாப். சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் படம் இயக்குகிறார் சுரேஷ். படத்தின் பெயர் கன்னிராசி.
இது பழைய கன்னிராசியின் ரீ-மேக் அல்ல என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறார் சுரேஷ். இந்தப் படத்தின் விசேஷம் இதுவரை இயக்குனராக இருந்த சுரேஷ், இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் ஆகிறார். ஆம், கன்னிராசியில் சுரேஷ்தான் ஹீரோ.
ஹீரோயின் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்தபின் படம் குறித்து பிரமாண்டமாக அறிவிக்க இருக்கிறாராம்.