படத்துக்குப் படம் கேமராமேனை மாற்றுவார். ஹீரோக்களும் மாறுவார்கள். அறிமுகமானது முதல் மாறாமலிருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜையும் மாற்றினார். கௌதமிடம் மாறாமலிருப்பது ஒரேயொருவர், டேனியல் பாலாஜி.
காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரி. வேட்டையாடு விளையாடுவில் சைக்கோ வில்லன். இதோ, மீண்டும் கௌதமின் சென்னையில் ஒரு மழைக்காலத்தில் டேனியல் பாலாஜி. இதில் வேட்டையாடு விளையாடு போலவே சைக்கோ கதாபாத்திரம்.
முத்திரை படத்தில் ஹீரோவாக நடித்து வரும்போது, இப்படி சைக்கோ வில்லனாக நடித்தால் எப்படி என்ற சராசரி யோசனையெல்லாம் டேனியலிடம் கிடையாது. நடிகன் என்பவன் நல்ல கதாபாத்திரம் எதிலும் நடிக்கலாம். நல்லவனாக மட்டும் நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில் அர்த்தம் இல்லை என்கிறார் தெளிவாக!
டேனியலுடன் படத்தில் நிகிதா, நேத்ரா என்ற இரு புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.