'ஆனந்தம் ஆயிரம்' என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் பூமிகா. நானு ஸ்ரீஹரி என்ற தெலுங்கு இயக்குனர் படத்தை இயக்குகிறார்.
இந்த செய்தி கேள்விப் பட்டதும் கோபத்தில் சிவந்து போனாராம் இயக்குனர் மு. களஞ்சியம்.
தொல். திருமாவளவனை வைத்து இவர் இயக்குவதாக இருந்த 'கலகம்' கைவிடப்பட்டதால், 'என் கனவு நீதானடி' என்றொரு கதையை தயார் செய்து தானே கதாநாயகனாகிவிட்டார். இதில் தனக்கு ஜோடியாக நடிக்க பூமிகாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார்.
தருகிறேன் என்றோ தரமாட்டேன் என்றோ பதில் ஏதும் சொல்லவில்லை பூமிகா. இதனால் நம்பிக்கை இழந்து போகாமல் முதல் ஷெல்யூலை பூமிகா இல்லாமலே முடித்துள்ளார். அந்த நேரம்தான் ஆனந்தம் ஆயிரம் அறிவிப்பு. கோபப்படாமல் என்ன செய்வார் களஞ்சியம்.
இத்தனைக்குப் பிறகும் இவர் நம்பிக்கை இழக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.