தித்திக்குமா இளமை?

செவ்வாய், 27 மே 2008 (19:10 IST)
தொழில்நுட்பம் அவ்வப்போது தொல்லைநுட்பம் ஆவதுண்டு. தொழிலுக்கும் தொல்லைக்கும் நடுவிலுள்ள கவர்ச்சியான பாதையில் பயணிக்கும் படம் தித்திக்கும் இளமை.

பேசுவதற்கு வாங்கிக் கொடுக்கும் செல்போனில் பெண்கள் குனிந்து கோலம் போடுவதை படமெடுக்கும் சில தொல்லை பேசிகள் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் திருட்டுப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வை இருட்டாக்கிவிடும். மானத்துக்கு பயந்த பெண்கள் உயரை மாய்த்துக் கொள்வதும் உண்டு.

இப்படி உயிரை விட்டவர்களின் குடும்பத்தாரின் கண்ணீர் கதையை தித்திக்கும் இளமை படத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சந்திரமோகன்.

திறந்தவெளி நீதிமன்றம் என்ற புதிய கான்செப்ட் ஒன்றையும் இதில் அறிமுகப் படுத்தியுள்ளார்களாம். எஜுகேஷன் சப்ஜெக்டா என்று தயங்கி கேட்பவர்களுக்கு ஆறுதல் செய்தி. மேலே உள்ள இரு விஷயங்களும் இடைச்செருகல்கள்தானாம். மெயின் பிக்சரில் இளமை கொப்பளிக்கும்.

தணிக்கைக்கு கொந்தளிப்பு ஏற்படாதே?

வெப்துனியாவைப் படிக்கவும்