ஓவர் நைட்டில் தசாவதாரம் உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும். சாத்தியமா இது? ஒக்காந்து யோசித்தால் எல்லாமே சாத்தியம்தான்!
webdunia photo
WD
தசாவதாரத்தில் கமலின் பத்து வேடங்களில் ஒன்று ஜார்ஜ் புஷ். ஜார்ஜ் புஷ்ஷுக்கே தெரியாத அவரது மேனரிஸங்களை திரையில் கொண்டுவரும் அளவுக்கு கெட்டிக்காரர் கமல். புஷ்ஷின் வேடத்தை அவருக்கே போட்டுக் காண்பித்தால்...?
இதுதான் திட்டம். லூசியானா கவர்னர் வழியாக, தசாவதாரத்தை வெள்ளை மாளிகையில் திரையிட முயற்சிகள் நடக்கின்றன. ஆங்கில சப்-டைட்டிலுடன் ஒரு பிரதியும் தயாராகி வருகிறது.
இந்த முயற்சி திருவினையானால் படத்தின் விற்பனை மதிப்பும் உச்சம் தொடுமாம்.