பாகவதர் டைப் முடி வைத்து போலீசாக நடித்ததெல்லாம் அந்தக் காலம். கேரக்டருக்கு தேவையென்றால் மொட்டை போடவும் தயங்குவதில்லை இன்றுள்ள நடிகர்கள்.
கஜினி சூர்யா, சிவாஜி ரஜினியைத் தொடர்ந்து மொட்டை பாஸாகியிருக்கிறார் விஷால். இந்த டாலடிக்கும் கெட்டப் சத்யம் படத்துக்காக.
webdunia photo
WD
நான்கு கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம் இன்று பன்னிரெண்டு கோடியைத் தாண்டியிருக்கிறது என சத்யத்தின் பிரமாண்டம் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிற நேரம், இன்னொரு பில்டப்பாக விஷாலின் மொட்டை கெட்டப்!
கிளைமாக்ஸில் போலீஸ் கமிஷனராக வரும் விஷால் மொட்டைத் தலையுடன் தோன்ற வேண்டும். தேவையைச் சொன்னதும் விக் சைஸ் பார்க்கச் சொல்லவில்லை விஷால். பார்பரை அழைத்து தலையை பளபளப்பாக்கியிருக்கிறார்.
சூரியன் முதல் சிவாஜி வரை நாயகன் மொட்டை போட்ட படங்கள் எல்லாம் ஹிட். மொட்டை செண்டிமெண்டை சத்யமும் காப்பாற்றட்டும்!