அதோ இதோ என்று போக்குக் காட்டிய கமலின் தசாவதாரம் ஜூன் 13 அன்று வெளிவருவதாக அறிவித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதுவரை அறிவித்த அரை டஜன் தேதிகள் நழுவிப் போன நிலையில், ஜூன் 13 கமலின் பத்து வேடங்களை திரையில் பார்க்க முடியுமா?
முடியும் என்று நேர்மறையாக நம்புவோம். அதுவரை இருக்கவே இருக்கிறது தசாவதாரம் டிரெய்லர். மூன்று மணி நேர படத்துக்கு இந்த மூன்று நிமிட டிரெய்லர் ஒரு சோறு பதம்.