காவிரி விவசாயிகளின் போராட்டத்தைச் சொல்லும் படம் என்றுதான் சொன்னார்கள். இரண்டாவது ஷெட்யூல் முடித்துவந்த கரிசல் மண் யூனிட் கூறும் கதையைக் கேட்டால், அது வேறு மாதிரி தொணிக்கிறது.
கரிசல் மண்ணில் சரண்ராஜ் ஹீரோ. ஊர் பெரியவர். ஊரில் கரகாட்டம் ஆடவரும் லாவண்யா, ஊர் பெரியவர் சரண்ராஜை வளைக்கப் பார்க்கிறார். லாவண்யாவால் ஊர் ஒற்றுமையில் விரிசல். இப்படி ஆட்டம் அடிதடி என செல்கிறது கதை.
சமீபத்தில் ஆயிரக்கணக்கில் வெளவால்கள் தொங்க, அதன் பின்னணியில் ஒரு பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். வழக்கமாக பின்னணியில் வானவில் இருக்கும். கரிசல் மண்ணில் வித்தியாசமாக வெளவால்!
மைடியர் குட்டிச்சாத்தானுக்குப் பிறகு அதிக வெளவால்கள் இடம்பெற்றது இந்தப் படத்தில்தானாம். ஒருவேளை தலைகீழாக நின்று யோசித்திருப்பார்களோ!