நானாபடேகர் வேடத்தில் பசுபதி!

வியாழன், 22 மே 2008 (20:22 IST)
பசுபதிக்கு இது கார்காலம். வாய்ப்பு, பருவமழையாக பொழிகிறது. குசேலனில் நடித்து வருகிறவர், அடுத்து இந்தியில் நானாபடேகர் ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கிறார்.

நானா படேகர், ஜான் ஆப்ரஹாம் நடித்த படம், டாக்ஸி நெ.9211. ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் வெற்றி பெற்ற இரண்டு படங்களில் இதுவும் ஒன்று. வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட இப்படம் லஷ்மிகாந்தனின் திரைக்கதை, இயக்கத்தில் தமிழில் ரீ-மேக் ஆகிறது.

நானா படேகர் நடித்த வேடத்தில் பசுபதி. அவருக்கு ஜோடியாக நடிக்க சிம்ரனிடம் பேசியுள்ளனர்.

ஜி.வி. ·பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இதனை தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்