பேராண்மை - பெரிய பட்ஜெட்!

வியாழன், 22 மே 2008 (20:12 IST)
கேரக்டராக மாறுவது எவ்வளவு கஷ்டம்ங்கிறதை இப்போ உணர்றேன்! பேராண்மையில் பெண்ட் கழற்றப்படும் ஜெயம் ரவி, உடல் வலியுடன் உதிர்த்த வார்த்தைகள் இவை.

கதை பழசாக இருந்தாலும் ஜனநாதனின் படத்தில் களமும், கேரக்டரும் ப்ரெஷ்ஷாக இருக்கும். பேராண்மையில் கதையும் கூட புதுசு.

வன அதிகாரியாக ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படம்தான், அவர் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராவது. ஏறக்குறைய ஒன்பது கோடி ரூபாயாம்.

ஜனநாதன் மீதுள்ள நம்பிக்கையால் ஒன்பது கோடிக்கு ·பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒத்துக் கொண்டிருக்கிறதாம் ஐங்கரன்.

ஒன்பது கோடிக்கான வொர்த் இருக்கும் என்பதை ஜெயம் ரவியின் வார்த்தைகளில் இரு‌ந்தே தெரிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்