தமிழக ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் கார்த்திக். எப்போதோ அவர் அந்தப் பதவியிலிருந்து தூக்கியெறியப் பட்டிருக்க வேண்டும். தொண்டர்கள் (அதிகம்) இல்லாத கட்சி என்பதால் பதவியின் ஆயுள் இவ்வளவு நாள் நீண்டது.
தலைமறைவு இயக்கம் நடத்துகிறவர்கள் கூட, கார்த்திக் அளவுக்கு ஓடி ஒளியமாட்டார்கள். அப்படிப்பட்டவருக்கு தனிக்கட்சி தொடங்க ஆசை. அதற்கு தூபம் போட தொண்டர்கள் என்ற பெயரில் ஜாதி அபிமானிகள் சிலர்.
கடந்த இரு தினங்களாக சரத்குமாருடன் கூடி குலாவுகிறார் நவரச நாயகன். சரத்குமாருக்கு நாடார் ஓட்டுகள் கியாரண்டி. கார்த்திக் கட்சி தொடங்கினால் தேவர் ஓட்டுகள் சிறிது கிடைக்கும். இரண்டு ஜாதி ஓட்டுகளும் சேர்ந்தால்...?
2011ல் நாம்தான் முதலமைச்சர்! இப்படியொரு கனா இருவருக்கும் இருக்கும்போல. விரைவில் கார்த்திக் கட்சி தொடங்கி சரத்குமாருடன் கூட்டணி அமைத்தால், அதிர்ச்சியடையாதீர்கள். கூட்டணிக்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.